முக்கியத்தகவல்

ஓவியப்போட்டி 2017- முடிவுகள்

ஓவியப்போட்டி 2017 முடிவுகள்   தமிழ்க் கல்விச்சேவையினால் 28.05.2017 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடுதளுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 580 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Result – Oviyam 2017 Final  

[ Read More ]

செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை 2016

செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசையும் செங்காளன், துர்க்கா மாநில மாணவர்களின் ஆண்டு 11 தொடக்க விழாவும் இன்று 01.10.2016 காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி 14:30 மணிவரை செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை நடைபெற்றது. நிகழ்வில் மாணவர்கள் பண்ணிசை ஓதி அவர்களே பூசையினையும் நிகழ்த்தினர். நிகழ்வின் சிறப்பம்சமாக 2016/17 கல்வியாண்டில் புதிய பாடநூலுடன் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 11 வகுப்பின் செங்காளன், துர்க்கா மாநில மாணவர்கள் இணைந்த வகையிலான தொடக்கவிழா நடைபெற்றது.

[ Read More ]

சுவிற்சர்லாந்தில் தமிழாசிரியர் பட்டயப் படிப்பின் பட்டயமளிப்பு விழா

சுவிற்சரலார்ந்து தமிழ்க்கல்விச்சேவை,  இந்தியாவில் இயங்கி வரும் SRM பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய அயலகத் தமிழாசிரியர் பட்டயப் படிப்பினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டயமளிப்பு விழா கடந்த 10.09.2016ஆம் திகதி  காலை 10:00 மணி முதல் சூரிச் ஆசிரியர் கல்விப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இப்பட்டயமளிப்பு விழாவில் SRM பல்கலைக்கழகத் தேர்வு ஆணையாளர் முனைவர் எஸ். பொன்னுச்சாமி அவர்களும் பேராசிரியர் இல.சுந்தரம் அவர்களும் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் தலைவர் திரு. சு. உதயபாரதிலிங்கம், இணைப்பாளர் திரு. க. பார்த்திபன், சூரிச்

[ Read More ]

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் நடாத்தப்படும் பொதுப்பரீட்சை இவ்வருடம் 30.04.2016ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களினை தமிழ்வித்தியாலயங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் ஏனையோரும் தமிழ்வித்தியாலயப் பொறுப்பாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்வித்தியாலயங்களில் கல்வி பயிலாத மாணவர்கள் விண்ணப்பப்படிவத்தினையும் விதிமுறையினையும் இவ் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுத்திகதி: 02.03.2016 புதன்கிழமை பரீட்சைத்திகதி: 30.04.2016 சனிக்கிழமை exam_form_2016

[ Read More ]