தகவல் Archive

முத்தமிழ் விழா 2018

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும், தமிழ்மக்களும் இணைந்து  முத்தமிழ் விழாவை 30.09.2018 ஞாயிறு பேர்ண் நகரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந்நிகழ்வில் தாய்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், சுவிஸ் நாட்டுப் பிரமுகர்கள், தமிழ்ப்பள்ளிகளின் மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், தமிழாசிரியர்கள், கலையாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள்  என இரண்டாயிரத்திற்கும் ...Read More

ஓவியப்போட்டி 2018: முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால்  27.05.2018 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 607 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிவுகளுக்கு இங்கே அழுத்தவும்:  Oviyam 2018 Results ...Read More

மெய்வல்லுனர் போட்டி  2018

தமிழ்ச் சிறார்களினதும் இளையவர்களினதும் மெய்வல்லுனர் விளையாட்டுகளின் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து அவற்றை வளர்த்தெடுக்கும் நோக்குடன் ஆண்டுதோறும் கல்விச்சேவையால் நடாத்தப்படுகின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டி இவ்வாண்டும் பேர்ண், ஜெனீவா, செங்காலன், ரிசினோ, பாசல், சூரிச் ஆகிய வலயங்களில் நடைபெறுகின்றது. இப் போட்டியில் ஓட்டம், பந்தெறிதல், பந்துபொறுக்குதல், குண்டெறிதல், நீளம் பாய்தல் போன்ற போட்டிகளும் 11 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கான அஞ்சல் ஓட்டமும், ஆசிரியர்களுக்கான ...Read More

தமிழ்மொழி  பட்டப்படிப்புக்கான  தகமைபெறும்  அடிப்படைக் கற்கைநெறித்தேர்வு

தமிழ்க் கல்விச்சேவை   அண்ணாமலை  பல்கலைக்கழகத்துடன்  இணைந்து நடாத்தவுள்ள  தமிழ்மொழி  பட்டப்பிடிப்புக்கான  தகமைபெறும்  அடிப்படைக் கற்கைநெறித் தேர்வு இன்று (27.05.2018) பேர்ண், பாசல், சூரிச் ஆகிய  மூன்று  தேர்வு நிலையங்களில்  சிறப்பாக  நடைபெற்றது.  இத்தேர்வில்  ஐம்பத்தேழு ஆசிரியர்கள்  மற்றும்  இளையோர்கள்  பங்குபற்றினர். ...Read More

ஓவியப்போட்டி 2018

சுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி நடாத்தப்பெற்றது. 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் 607 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இப் போட்டி முடிவுகளினை 27.06.2018 புதன்கிழமை பள்ளிமுதலவ்ர மூலமாக அல்லது கல்விச்சேவையின் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் 30.09.2018 ஆம் நாள் பேர்ண் – புறூக்டோர்வ் மண்டபத்தில் நடைபெறவுள்ள முத்தமிழ் விழாவில் வைத்து வழங்கப்பெறும். ...Read More

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்

  தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு – 2049 தைத்திங்கள் முதலாம் நாள் (14.01.2018)   தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவினைத் தமிழ்க் கல்விச்சேவைத் தமிழ்ப் பள்ளிகள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியிருந்தன. மாநில இணைப்பாளர், பள்ளிமுதல்வர்கள், துணைமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள், தமிழ்மக்கள் இணைந்த வகையில் பொங்கல் பொங்கிக் கதிரவனுக்குப் படைத்து மகிழ்ந்தனர். இயல், இசை, ...Read More