செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தமிழர் திருநாள்

திருவள்ளுவர் ஆண்டு 2048 தைத்திங்கள் முதலாம் நாள் (14.01.2017) சனிக்கிழமையன்று செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் இணைந்த வகையில் தமிழர் திருநாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர்.

மங்கள விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமாகியது. வெண்பனி பொழிகின்ற சுவிஸ் நாட்டின் வாழிடச் சூழலுக்கு ஏற்றதாக தாயகத்தின் தைப்பொங்கலை அப்படியே நினைவுபடுத்தும் வகையில் ஆண்டு 11 மாணவர்களால் பொங்கல் பொங்கிஇ பொங்கலோடு முக்கனிகளும் சேர்த்துக் கதிரவனுக்குப் படைக்கப்பட்ட காட்சி தமிழர் திருநாளின் நினைவகலாப் பதிவாகும்.
தொடர்ந்து மாணவர்களால் தமிழர்களின் கிராமியக் கலைவடிவங்களான காவடிஇ கோலாட்டம் கும்மி தப்பாட்டம் ஆகியவற்றோடு இயல் இசை நாடக நிகழ்வுகளும் பட்டிமன்றம் கவியரங்கம் போன்ற நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

தொன்மைச் சிறப்புமிக்க தமிழரின் பண்பாட்டையும் வாழ்வியலையும் வெளிப்படுத்தும் தமிழர் திருநாள் செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்களால் கொண்டாடப்பட்டமை எமது பண்பாடு இளைய தலைமுறையினரிடம் கையளிக்கப்பட்டமையையும் அதனை அவர்கள் விருப்புடன் கையேற்று இனிவரும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் கையளிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் சுட்டி நின்றது.

குறுகிய கால ஏற்பாட்டுடன் சிறப்பாக நடந்தேறிய தமிழர் திருநாளைத் திட்டமிட்ட வகையில் நடத்தி முடிப்பதற்கு உறுதுணை நின்ற தமிழ்ப் பள்ளி முதல்வர்கள்இ ஆசிரியர்கள்இ மாணவர்கள்இ பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.