மாணவர்களின் தன்விபரம்

தமிழ்க் கல்விச்சேவையுடன் இணைந்து பணியாற்றும் பழைய மாணவர்கள் மற்றும் ஆண்டு 11 இல் கல்விகற்றுவரும் மாணவர்களின் தன்விபரம் தமிழ்க் கல்விச்சேவையின் பணிகளில் எமது இளையவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கோடு தன்விபரப்படிவமொன்று 21.05.2017 பேர்ணில் நடைபெற்ற அவர்களுடனான ஒன்றுகூடலில் வழங்கப்பெற்றது. அன்றைய நாள் வருகை தராத மாணவர்களையும் எம்மோடு இணைத்துக் கொள்ளும் வகையில் அந்தப்படிவம் எமது இணையத்தளத்தில் தரவேற்றப்படுகிறது. இதனை 31.05.2017ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக்கூடியவாறு மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்பிவைக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம். இளையோரது

[ Read More ]

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது வருடமாக இன்று, 06.05.2017 ஆம் திகதி சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பதினோராம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். எழுத்துத்தேர்வுடன் இவ்வருடம்முதல் புலன்மொழித்தேர்வுகளும்; நடாத்தப்பெற்றன. இக் கல்வியாண்டுமுதல் புதிதாக ஆரம்பிக்கப்பெற்ற பதினோராம் வகுப்புத்தேர்வில் 164 மாணவர்கள் தோற்றியமை சிறப்பாகும். தமிழ்க் கல்விச்சேவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடநூல்கள்

[ Read More ]

செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தமிழர் திருநாள்

திருவள்ளுவர் ஆண்டு 2048 தைத்திங்கள் முதலாம் நாள் (14.01.2017) சனிக்கிழமையன்று செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் இணைந்த வகையில் தமிழர் திருநாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மங்கள விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமாகியது. வெண்பனி பொழிகின்ற சுவிஸ் நாட்டின் வாழிடச் சூழலுக்கு ஏற்றதாக தாயகத்தின் தைப்பொங்கலை அப்படியே நினைவுபடுத்தும் வகையில் ஆண்டு 11 மாணவர்களால் பொங்கல் பொங்கிஇ பொங்கலோடு முக்கனிகளும் சேர்த்துக் கதிரவனுக்குப் படைக்கப்பட்ட காட்சி தமிழர் திருநாளின் நினைவகலாப் பதிவாகும். தொடர்ந்து மாணவர்களால் தமிழர்களின் கிராமியக் கலைவடிவங்களான காவடிஇ

[ Read More ]

சுவிற்சர்லாந்தில் 22வது வருடமாக நடைபெற்ற தாய்மொழிப் பொதுப்பரீட்சை

சுவிற்சர்லாந்தில் 22 வருடங்களிற்கு மேலாக நடுநிலைசார் நற்றமிழ்ச் சேவையாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவையின் இருபத்தோராவது பொதுப்பரீட்சை சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் இன்று (09.05.2015) ஐம்பத்தெட்டு பரீட்சை நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தமிழ்மொழிப் பரீட்சையில் ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு பத்து வரை ஐயாயிரத்து இருநூற்றுத்தொண்ணூற்று ஏழு பரீட்சார்த்திகள் தோற்றியிருக்கின்றனர். தமிழ் வித்தியாலயங்களின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் என பலநூறு மேற்பார்வையாளர்களுடன் தமிழ் வித்தியாலயங்களில் ஆண்டு பத்துவரை கல்வியை நிறைவுசெய்து தற்போது உதவி ஆசிரியர்களாகக் கடமையாற்றிவரும் 83 இளம்தலைமுறையினரும்

[ Read More ]

செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை 2016

செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசையும் செங்காளன், துர்க்கா மாநில மாணவர்களின் ஆண்டு 11 தொடக்க விழாவும் இன்று 01.10.2016 காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி 14:30 மணிவரை செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை நடைபெற்றது. நிகழ்வில் மாணவர்கள் பண்ணிசை ஓதி அவர்களே பூசையினையும் நிகழ்த்தினர். நிகழ்வின் சிறப்பம்சமாக 2016/17 கல்வியாண்டில் புதிய பாடநூலுடன் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 11 வகுப்பின் செங்காளன், துர்க்கா மாநில மாணவர்கள் இணைந்த வகையிலான தொடக்கவிழா நடைபெற்றது.

[ Read More ]

சுவிற்சர்லாந்தில் தமிழாசிரியர் பட்டயப் படிப்பின் பட்டயமளிப்பு விழா

சுவிற்சரலார்ந்து தமிழ்க்கல்விச்சேவை,  இந்தியாவில் இயங்கி வரும் SRM பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய அயலகத் தமிழாசிரியர் பட்டயப் படிப்பினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டயமளிப்பு விழா கடந்த 10.09.2016ஆம் திகதி  காலை 10:00 மணி முதல் சூரிச் ஆசிரியர் கல்விப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இப்பட்டயமளிப்பு விழாவில் SRM பல்கலைக்கழகத் தேர்வு ஆணையாளர் முனைவர் எஸ். பொன்னுச்சாமி அவர்களும் பேராசிரியர் இல.சுந்தரம் அவர்களும் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் தலைவர் திரு. சு. உதயபாரதிலிங்கம், இணைப்பாளர் திரு. க. பார்த்திபன், சூரிச்

[ Read More ]

“ஓவியப்போட்டி 2016” முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி 15 நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் 542 மாணவர்கள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். வெற்றிபெற்ற மாணவர்களில் 5,6,7,8,9,10,11 வயதுப் பிரிவு மாணவர்களுக்கு குறிப்பிட்ட மாநிலங்களை இணைத்த வகையில் வலய மட்டத்திலும், ஏனைய 13, 15, 17, 19 வயதுப்பிரிவுகளுக்கு சுவிஸ் நாடுதழுவிய ரீதியிலும் பரிசில்கள் வழங்கப்படுகிறது. நன்றி பரீட்சைக்குழு கல்விச்சேவை. சூரிச் 03.10.2016

[ Read More ]

சூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்

சூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாகக் கடமையாற்றுவதற்குத் தகைமையுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகள் தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கான தகைமையும,அனுபவமும் கொண்டிருப்பதுடன் ஜேர்மன் மொழியில் B1 நிலையில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், ஈமெயில், கல்வித்தகைமை, அனுபவம், ஜேர்மன் மொழியறிவு ஆகிய விபரங்களினை உள்ளடக்கிய தன்விபரக் குறிப்பினை, சான்றிதழ்களின் நிழற்பிரதிகளுடன் 30.09.2015ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக Tamil Education

[ Read More ]

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் நடாத்தப்படும் பொதுப்பரீட்சை இவ்வருடம் 30.04.2016ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களினை தமிழ்வித்தியாலயங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் ஏனையோரும் தமிழ்வித்தியாலயப் பொறுப்பாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்வித்தியாலயங்களில் கல்வி பயிலாத மாணவர்கள் விண்ணப்பப்படிவத்தினையும் விதிமுறையினையும் இவ் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுத்திகதி: 02.03.2016 புதன்கிழமை பரீட்சைத்திகதி: 30.04.2016 சனிக்கிழமை exam_form_2016

[ Read More ]