கல்விச்சேவையின் நோக்கம்
சுவிசில் வாழும் தமிழ் மாணவர்கள் ஆர்வத்துடன் திணிப்புக்கள் அற்றமுறையில் தாய்மொழி கற்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளல்.
தாய்மொழிக் கல்வியுடன் சுவிஸ் கல்வி-சமூக-சட்ட அமைப்புமுறைகளை விளக்குவதுடன், பல்லினப்பண்பாட்டு வாழ்வியல் முறையில் இணைந்துவாழ தகமைப்படுத்தல்.
தாய்மொழி கற்கும் மாணவர்களிடையே தமது சுயதேடலை ஊக்குவிக்கும், வேரை அறியும், தாயகத்தை நோக்கிச் சிந்திக்கவைக்கும், சுய ஆற்றலை வெளிக்கொணரும் ஃ வளர்க்கும் போட்டிகள், நிகழ்வுகளை நடாத்துதல்.
கல்விச்சேவையினால் மேற்கொள்ளப்படும் கற்பித்தல், கற்றல் செயற்பாடுகளையும், நிறுவனமயப்படுத்தப்பட்ட கல்விச்சேவையின் செயற்பாட்டினையும் சுவிஸ் மாநில, அரச கல்வித்திணைக்களங்கள் அங்கீகரிக்கும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல்.



