Back

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து

இது எங்கள் தமிழ் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்குப் பொறுப்புடன் பரிமாற்றும் கல்வி பயணமாகும். மொழி, கலாச்சாரம், மரபுகளை ஏங்கிய வருங்கால குழந்தைகளுக்குத் தெய்வீகமாகக் கற்றுக்கொடுத்தலை குறிக்கோளாகக் கொண்ட தமிழ் பள்ளியாக எங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறோம்.

அறிமுகம்

4000
மாணவர்கள்
103
பள்ளிகள்
430
ஆசிரியர்கள்
30
ஆண்டுகள்
சுவிற்சர்லாந்தில் சமூகப் பற்றாளர்கள், பெற்றோர் பலர் தாம் வாழ்ந்து வந்த பிரதேசங்களில் 1990 களில் தமிழ்ப் பள்ளிகளை ஆரம்பித்து‚ தமிழ்ப்பிள்ளைகளுக்குத் தாய்மொழியினைக் கற்பித்து வந்தனர். ஆங்காங்கே தனித்தனியாக ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வந்த தமிழ்ப் பள்ளிகளின் கற்பித்தல் செயற்பாடுகளை ஒன்றிணைப்பதற்காகவும்‚ மேம்படுத்துவதற்குமாக‚ ‵தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - கல்விச் சேவை‵ எனும் அமைப்பொன்று 1995 இல் தொடங்கப்பெற்று‚ இந்நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் ஒரு நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இவ் அமைப்பானது மேலும் பல தமிழ்ப் பள்ளிகளை தொடங்கி சுவிற்சர்லாந்து நாட்டில் குறிப்பிடத்தக்க மிகப் பாரிய தாய்மொழிக் கல்வி அமைப்பாக மாற்றம் பெற்றது. 2005ஆம் ஆண்டு இவ்வமைப்பு ‵தமிழ்க் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து‵ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இவ்வமைப்பின் கீழ் தற்போது சுவிற்சர்லாந்து நாட்டிலுள்ள 24 மாநிலங்களில் 103 தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 4000 வரையான தமிழ்க் குழந்தைகள் தாய்மொழி கற்று வருகின்றனர். இவர்களுக்கு 430 தமிழாசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் அனைத்துத் தமிழ்க் குழந்தைகளுக்கும் தாய்மொழி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பது இவ்வமைப்பின் நோக்கங்களுள் ஒன்றாகும். தமிழ்ப் பள்ளிகளில் தாய்மொழியுடன்‚ தமிழர் கலைகள்‚ வரலாறு ஆகியனவும் இம்மொழியினூடாகத் தமிழ்க் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. விருப்புப் பாடமாக சைவ சமயம் அல்லது கிறிஸ்தவ சமயம் கற்பிக்கப்படுகிறது.

தமிழ்க் கல்விச்சேவை, சுவிற்சர்லாந்து மாநிலக் கல்வித்திணைக்களங்களின் அனுமதியுடனும் ஆதரவுடனும் செயற்பட்டுவருகிறது. 'தாய்மொழி மற்றும் கலாசாரம்" எனும் பெயர் கொண்ட தாய்மொழிக்கல்வி ஊக்குவித்தல் கருத்திட்டம் ஒன்றினைக் கல்வித் திணைக்களம் உருவாக்கி, அதன் அடிப்படையில் அரச பள்ளிகளில் வகுப்பறைகளையும்‚ ஆசிரியர்களுக்கான அடிப்படைக் கற்பித்தல் பயிற்சிகளையும் வழங்குகிறது. கூடுதலான மாநிலங்களில், தமிழ்மொழி கற்கையில் மாணவர்கள் பெறும் புள்ளிகள் அரச பள்ளி வகுப்புகளில் வழங்கப்படும் சான்றிதழ்களில் பதிவு செய்யப்பெறுகிறது. இக்கருத்திட்டச் செயற்பாட்டிற்கு யுனெஸ்கோ அமைப்பினது "தாய்மொழியில் சிறந்த ஆற்றலைக் கொண்டிருக்கும் குழந்தை பிற மொழிகளை எளிமையாகக் கற்றுக் கொள்கிறது." எனும் கூற்று அடிப்படையாகும்.

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழி வகுப்புகள் வாரத்தில் 2-3 மணித்தியாலயங்கள் அரச பள்ளிகளில் விடுமுறை நேரங்களான புதன் பிற்பகல்‚ சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறுகிறன. அரையாண்டுத் தேர்வு, பொதுத் தேர்வு என அரையாண்டுக்கொரு தேர்வு நடத்தப்படுகின்றது. மேலும்‚ தமிழ்த் திறன் போட்டிகள்‚ பேச்சுப் போட்டி‚ கவிதைப் போட்டி‚ ஓவியப் போட்டி‚ மெய்வல்லுனர் போட்டி என்பனவும் நடத்தப்படுகிறன.

புலம் பெயர்ந்த தேசத்தில் தாய்மொழிக் கல்வியானது அவ்வவ் நாட்டு பொதுக் கல்விச் செயற்பாடுகளுடன் இணைந்து செல்வது அவசியமாகிறது. ஆதலால் சுவிற்சர்லாந்து அரச கல்வித் திணைக்களம் தாய்மொழிக் கல்விக்கான வழிகாட்டல்களைத் தயாரித்து வழங்கியுள்ளது.

தமிழாசிரியர்களுக்கான தொடர் பயிற்சிகள்‚ உயர்கல்வி வாய்ப்புகள் தமிழ்க் கல்விச்சேவையால் வழங்கப்பெறுகிறது.

நோக்கம்:

தமிழ்மனை

தமிழ்க் கல்விச்சேவையினதும் அதன் துணை அமைப்புகளினதும் பயன்பாட்டுக்குமாகக் கடந்த 2023ஆம் ஆண்டு Gewerbestrasse 4, 8162 Steinmaur என்னும் இடத்தில் இரு தளங்களைக் கொண்ட நிரந்தரக் கட்டடமே தமிழ்மனை ஆகும். இது 15.01.2024ஆம் நாளிலிருந்து இயங்கிவருகின்றது.

இங்கு தமிழ்க் கல்விச்சேவையும் அதன் துணை அமைப்புகளான

  • அனைத்துலகக் தமிழ்க்கலை நிறுவகம்
  • தமிழ்க் கல்விச்சேவையின் உதவும் அமைப்பான TESS Care
  • அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை
  • மற்றும் மொழி பண்பாட்டு நிறுவகம்

ஆகியவை தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.

தற்போதய நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

திரு. தர்மலிங்கம் தங்கராசா
தலைவர்
திருமதி இந்திரா நந்தகுமார்
துணைத் தலைவர்
திருமதி. பேரின்பவதனி பாஸ்கரலிங்கம்
செயலாளர்
திருமதி அமுதா அன்பழகன்
துணைச் செயலாளர்
திருமதி சங்கீதா சற்குணநாதன்
பொருளாளர்
திருமதி துவாரகா ஜினோதன்
உறுப்பினர்
திரு. ஜெயரட்ணராஜா வினுசன்
உறுப்பினர்
திருமதி கோமதி உதயகுமாரன்
உறுப்பினர்
செல்வி அருட்சாயினி அருட்செல்வன்
உறுப்பினர்
செல்வி இசைவிழி சௌந்தரராஜா
பயிலுனர்
செல்வி சிவப்பிரியா சிவராஜ்
பயிலுனர்