சுவிற்சர்லாந்து நாட்டிலே தமிழ்மொழிக் கல்வியை நிறைவு செய்திருக்கும் இளையோர் மற்றும் தமிழ்மொழிக் கல்வியைத் தொடரவிரும்பும் இளையோர் ஒன்றிணைந்து கலந்துரையாடி தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, வரலாறு மற்றும் கலைகள் தொடர்பான அறிவையும் ஆளுமையையும் மேம்படுத்தும் நோக்கில், தமிழ்க் கல்விச்சேவையால் இளையோருக்கான மாதாந்த இணையவழிப் பயிலரங்கு ஒன்று ஒழுங்குசெய்யப்பெறுகிறது. தமிழ் இளையோருக்கான முதலாவது தமிழ்ப் பயிலரங்கு 11.04.2021 ஆம் …