தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து வெள்ளிவிழாவை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப்போட்டி முடிவுகள்

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை அதன் வெள்ளிவிழாவினை இவ்வாண்டு (2020) கொண்டாடுகிறது. இதனையிட்டு தமிழ்க் கல்விச்சேவையினால் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள் நடாத்தப்பெற்றன. இப் போட்டிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சுவிஸ்வாழ் பொதுமக்கள் எனப் பலரும்  கலந்துகொண்டனர். வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களின் விபரங்கள் இணைக்கப்பெற்றுள்ளது.   தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து. 30.10.2020 ...Read More

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து வெள்ளிவிழாவை முன்னிட்டு நடாத்தும் கட்டுரை, கவிதைப் போட்டிகள்

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை அதன் வெள்ளிவிழாவினை இவ்வாண்டு (2020) கொண்டாடுகிறது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகிறோம். இதனையிட்டு தமிழ்க் கல்விச்சேவையினால் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள் நடாத்தப்பெறுகின்றன. இப் போட்டிகளில் வயதுப் பிரிவுகளுக்கேற்ப மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சுவிஸ்வாழ் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.   கட்டுரை, கவிதைப்போட்டிகள் படிவம் தமிழ்க் கல்விச்சேவை வெள்ளிவிழாவை முன்னிட்டு நடாத்தும் கட்டுரை, கவிதைப்போட்டிகள் ...Read More

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான அவசர உதவி 2020

அனைவருக்கும் வணக்கம், தற்போதைய பேரிடர் காரணமாகத் தாயகத்தில் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகள் பெற்றுக்கொள்ள முடியாமல் இன்னல்களுக்கு உள்ளளாகியிருக்கும் எமது உறவுகளுக்கு உதவுவதற்காக, எமது கோரிக்கையினை ஏற்று, தங்களால் முடிந்த நிதி உதவியினை வழங்கிவரும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.🙏 தாயகத்தில் மக்களுக்கான உதவிகள் அங்கே பதிவுசெய்து இயங்கிவரும் வெளிச்சம் பவுண்டேசன் ...Read More

தமிழ்க் கல்விச்சேவையின் லவுசான் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் திருமதி மேரி வெற்றீசியா இரட்ணராசா அவர்கள் இன்று பிற்பகல் இயற்கையெய்தினார்

தமிழ்க் கல்விச்சேவையின் லவுசான் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் திருமதி மேரி வெற்றீசியா இரட்ணராசா அவர்கள் இன்று பிற்பகல் இயற்கையெய்தினார் என்பதனை அறியத்தருகிறோம். இவர், இப்பள்ளியின் முதல்வரும், பிரென்ஸ் பேசும் மாநிலங்களின் துணை மாநில இணைப்பாளருமான திரு. இரட்ணராஜா அவர்களின் துணைவியார் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக இப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரின் ஆத்மா அமைதிபெற ...Read More