தமிழ்க் கல்விச்சேவையின் லவுசான் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் திருமதி மேரி வெற்றீசியா இரட்ணராசா அவர்கள் இன்று பிற்பகல் இயற்கையெய்தினார்

தமிழ்க் கல்விச்சேவையின் லவுசான் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்
திருமதி மேரி வெற்றீசியா இரட்ணராசா அவர்கள் இன்று பிற்பகல் இயற்கையெய்தினார் என்பதனை அறியத்தருகிறோம். இவர், இப்பள்ளியின் முதல்வரும், பிரென்ஸ் பேசும் மாநிலங்களின் துணை மாநில இணைப்பாளருமான திரு. இரட்ணராஜா அவர்களின் துணைவியார் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக
இப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
அவரின் ஆத்மா அமைதிபெற பிரார்த்திப்போம்.
– தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து