சுவிற்சர்லாந்து நாட்டிலே தமிழ்மொழிக் கல்வியை நிறைவு செய்திருக்கும் இளையோர் மற்றும் தமிழ்மொழிக் கல்வியைத் தொடரவிரும்பும் இளையோர் ஒன்றிணைந்து கலந்துரையாடி தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, வரலாறு மற்றும் கலைகள் தொடர்பான அறிவையும் ஆளுமையையும் மேம்படுத்தும் நோக்கில், தமிழ்க் கல்விச்சேவையால் இளையோருக்கான மாதாந்த இணையவழிப் பயிலரங்கு ஒன்று ஒழுங்குசெய்யப்பெறுகிறது. தமிழ் இளையோருக்கான முதலாவது தமிழ்ப் பயிலரங்கு 11.04.2021 ஆம் …
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 25 ஆவது பொதுத்தேர்வாக இன்று, 04.05.2019 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 64 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5265 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன்; சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் …
தமிழ்க் கல்விச்சேவையினால் 27.05.2018 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 607 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிவுகளுக்கு இங்கே அழுத்தவும்: Oviyam 2018 Results
தமிழ்ச் சிறார்களினதும் இளையவர்களினதும் மெய்வல்லுனர் விளையாட்டுகளின் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து அவற்றை வளர்த்தெடுக்கும் நோக்குடன் ஆண்டுதோறும் கல்விச்சேவையால் நடாத்தப்படுகின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டி இவ்வாண்டும் பேர்ண், ஜெனீவா, செங்காலன், ரிசினோ, பாசல், சூரிச் ஆகிய வலயங்களில் நடைபெறுகின்றது. இப் போட்டியில் ஓட்டம், பந்தெறிதல், பந்துபொறுக்குதல், குண்டெறிதல், நீளம் பாய்தல் போன்ற போட்டிகளும் 11 வயதுக்கு மேற்பட்ட …
சுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி நடாத்தப்பெற்றது. 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் 607 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இப் போட்டி முடிவுகளினை 27.06.2018 புதன்கிழமை பள்ளிமுதலவ்ர மூலமாக அல்லது கல்விச்சேவையின் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் 30.09.2018 ஆம் நாள் பேர்ண் – புறூக்டோர்வ் மண்டபத்தில் நடைபெறவுள்ள …
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு – 2049 தைத்திங்கள் முதலாம் நாள் (14.01.2018) தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவினைத் தமிழ்க் கல்விச்சேவைத் தமிழ்ப் பள்ளிகள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியிருந்தன. மாநில இணைப்பாளர், பள்ளிமுதல்வர்கள், துணைமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள், தமிழ்மக்கள் இணைந்த வகையில் பொங்கல் பொங்கிக் கதிரவனுக்குப் …