தமிழ் இளையோர் மாநாடு 2019

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து
தமிழ் இளையோர் மாநாடு 2019
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முதன்முறையாக நடாத்திய தமிழ் இளையோர் மாநாடு 05.10.2019 ஆம் நாள் சனிக்கிழமை பேர்ண் மாநகரில் நடைபெற்றது. இதில் தொண்ணூறுக்கும் அதிகமான இளையோர் கலந்துகொண்டு சுவிஸ் நாட்டில் தமிழ்மொழிக்கல்வி, கலைகள், பண்பாடு மற்றும் தமிழ்மொழியின் சிறப்பு, அதனைக் காக்கவேண்டிய இன்றியமையாமை பற்றிக் கலந்துரையாடினர். அத்துடன் தமிழர்நலன் மற்றும் தமிழ்மொழிக்கல்வி, கலைகள் மற்றும் பண்பாட்டைப் பேணுவதில் இளையோர் பங்களிப்புத் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பெற்றது. இம்மாநாட்டில் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள் அருணாசலம் சண்முகதாஸ் மற்றும் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் சிறப்புரையாற்றினர். அடுத்த தமிழ் இளையோர் மாநாட்டினை 03.10.2020 ஆம் நாள் ஐரோப்பாவிலுள்ள ஏனைய நாடுகளிலுள்ள தமிழ் இளையோரையும் ஒன்றிணைத்து நடாத்தத் தீர்மானிக்கப்பெற்றுள்ளது.