மாணவர்களின் தன்விபரம்

தமிழ்க் கல்விச்சேவையுடன் இணைந்து பணியாற்றும் பழைய மாணவர்கள் மற்றும் ஆண்டு 11 இல் கல்விகற்றுவரும் மாணவர்களின் தன்விபரம்

தமிழ்க் கல்விச்சேவையின் பணிகளில் எமது இளையவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கோடு தன்விபரப்படிவமொன்று 21.05.2017 பேர்ணில் நடைபெற்ற அவர்களுடனான ஒன்றுகூடலில் வழங்கப்பெற்றது. அன்றைய நாள் வருகை தராத மாணவர்களையும் எம்மோடு இணைத்துக் கொள்ளும் வகையில் அந்தப்படிவம் எமது இணையத்தளத்தில் தரவேற்றப்படுகிறது. இதனை 31.05.2017ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக்கூடியவாறு மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்பிவைக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

இளையோரது தகைமைகள், துறைசார் திறமைகள், ஆர்வம், விருப்பம் என்பவற்றை இனங்கண்டு, அவற்றிற்கு ஏற்ப பணிகளினைப் பகிர்ந்தளித்து 24.09.2017 ஆம் திகதி பேர்ண் நகரில் நடைபெறவுள்ள முத்தமிழ் விழா மற்றும் கல்விச் சேவையின் ஏனைய அனைத்துச் செயற்பாடுகளிலும் பட்டறிவுள்ள பெரியவர்களின் வழிகாட்டலோடு இளையவர்கள் முழுமையாக பங்கேற்று சிறப்பாகச் செய்வதை இலக்காகக் கொண்டதே இச்செயற்பாடாகும்.

உங்களால் தரப்படும் தகவல்கள் யாவும் கல்விச் சேவையின் செயற்பாடுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதோடு இரகசியம் பேணிப்பாதுகாக்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது தாய்மொழிக் கல்வியினதும் தமிழ்ச் சமூகத்தினதும் மேம்பாட்டிற்குத் தங்களின் முழுமையான ஒத்துழைப்பைப் பெரிதும் வேண்டிநிற்கிறோம்.

தொடர்புகளுக்கு :
044 440 20 55 076 538 48 32
kalvichevai@gmail.com

TESS, Regensbergstrasse 238, Postfach 6711, 8050 Zürich.

படிவம் தரையிறக்கவும்

Leave a Reply