தமிழ்ப்பேராய விருதுகள் 2018 – தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது

 திரு. இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதினை, சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழுக்கும் தமிழ்க்கல்விக்கும் சிறப்பாகப் பணியாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவைக்கு வழங்கி மதிப்பளித்துள்ளது. விருது வழங்கும் விழா 25.09.2019 ஆம் நாள் இந்நிறுவனத்தின் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்க் கல்விச்சேவையின் சார்பில் இதன் மூத்த தமிழாசிரியர்களுள் ஒருவரான திருமதி அன்பழகி திருநீலகண்டன் அவர்கள் விருதினைப் பெற்றுக்கொண்டார்.

இவ் மதிப்புமிக்க, உயரிய விருதுக்கு தமிழ்க் கல்விச்சேவையைத் தெரிவு செய்ததுடன் 100,000 ரூபா பணத்தினையும் வழங்கி உற்சாகப்படுத்திய திரு. இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு தமிழ்க் கல்விச்சேவை நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.