பள்ளி முதல்வர்களுக்கான செயலமர்வு 11.06.2017

சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச் சேவையினால் பள்ளிமுதல்வர்களுக்கான செயலமர்வு  ஒன்று (11.06.2017 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து 17.00 மணி வரை பேர்ண் மாநகரில் நடாத்தப்பெற்றது.

கனடா ரொரன்ரோப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளரும், ரொரன்ரோ மாவட்டக் கல்வித் திணைக்களத்தின் அனைத்துலக மொழிக் கல்வித்திட்ட அலுவலரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக கற்கை நெறிகளுக்கான கனேடிய நாட்டிற்கான விரிவுரையாளருமான திரு. பொன்னையா விவேகானந்தன் அவர்கள் கலந்து கொண்டு இச் செயலமர்வினை மிகச் சிறப்பாக நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செயலமர்வில் தமிழ்க் கல்விச் சேவையின் மாநில இணைப்பாளர்கள், பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தார்கள்.
தமிழ்மொழியின் தொன்மையும் சிறப்பும், தாய்மொழி கற்பித்தல், பள்ளி நிர்வாகம் போன்ற முக்கிய பல விடயங்கள் தொடர்பாகக் கருத்துகள் பரிமாறப்பட்டன.

Leave a Reply