செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை 2016

செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசையும் செங்காளன், துர்க்கா மாநில மாணவர்களின் ஆண்டு 11 தொடக்க விழாவும்
இன்று 01.10.2016 காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி 14:30 மணிவரை செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை நடைபெற்றது.

நிகழ்வில் மாணவர்கள் பண்ணிசை ஓதி அவர்களே பூசையினையும் நிகழ்த்தினர். நிகழ்வின் சிறப்பம்சமாக 2016/17 கல்வியாண்டில் புதிய பாடநூலுடன் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 11 வகுப்பின் செங்காளன், துர்க்கா மாநில மாணவர்கள் இணைந்த வகையிலான தொடக்கவிழா நடைபெற்றது.

இத்தொடக்க விழாவினைக் கல்விச்சேவையின் துர்க்கா, செங்காளன் கிறபுண்டன் மாநிலங்களின் இணைப்பாளர்கள் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்து கொண்டு இனிப்புக் கொடுத்து மாணவர்களுக்குப் பாடநூல்ககளை வழங்கி, ஆண்டு 11 வகுப்பிலே இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.
சிறப்புரை நிகழ்த்திய கிறபுண்டன் மாநில இணைப்பாளர் செங்காளன் மாநில இணைப்பாளர் ஆகியோர் தாய்மொழிக்கல்வியின் அவசியம் பற்றியும் ஆண்டு 11 தொடக்கவிழாவின் சிறப்பப் பற்றியும் தமிழாசிரியர்களின் கல்வித்தகைமையை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியாவின் SRM பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழாசிரியர் பட்டயக்கல்விக்கான புதியவகுப்புக்கள் செங்காளன் மாநிலத்திலும் தொடங்கப்பட்டமை பற்றியும் கூறினார்கள்.
மாணவர்களின் திருக்குறள் கூறல்;> தேவாரம்> பேச்சு> கவிதை> வாத்தியஇசை> போன்ற நிகழ்வுகளுடன் விழா சிறப்புற நடைபெற்றது.

Leave a Reply