சுவிற்சர்லாந்தில் 22வது வருடமாக நடைபெற்ற தாய்மொழிப் பொதுப்பரீட்சை

சுவிற்சர்லாந்தில் 22 வருடங்களிற்கு மேலாக நடுநிலைசார் நற்றமிழ்ச் சேவையாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவையின் இருபத்தோராவது பொதுப்பரீட்சை சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் இன்று (09.05.2015) ஐம்பத்தெட்டு பரீட்சை நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது.

இத்தமிழ்மொழிப் பரீட்சையில் ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு பத்து வரை ஐயாயிரத்து இருநூற்றுத்தொண்ணூற்று ஏழு பரீட்சார்த்திகள் தோற்றியிருக்கின்றனர். தமிழ் வித்தியாலயங்களின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் என பலநூறு மேற்பார்வையாளர்களுடன் தமிழ் வித்தியாலயங்களில் ஆண்டு பத்துவரை கல்வியை நிறைவுசெய்து தற்போது உதவி ஆசிரியர்களாகக் கடமையாற்றிவரும் 83 இளம்தலைமுறையினரும் இணைந்துள்ளனர்.

அதிகளவு தமிழ்ச்சிறார்கள் தம் தாய்மொழியைக் கற்று, பரீட்சைக்குத் தோற்றியிருப்பதும், இளம் தலைமுறையினர் பரீட்சைப் பணிகளில் பங்கேற்றிருப்பதும் எதிர்காலச் சந்ததிக்கு தாய்மொழியை எடுத்துச் செல்லல் எனும் இலக்கைநோக்கி கல்விச்சேவை உறுதியாகப் பயணிப்பதைப் புலப்படுத்துகின்றது.

தமிழ்க் கல்விச்சேவை
சுவிற்சர்லாந்து.
சூரிச், 09.05.2015

Leave a Reply