தமிழ்க் கல்விச்சேவையினால் 27.05.2018 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 607 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிவுகளுக்கு இங்கே அழுத்தவும்: Oviyam 2018 Results
தமிழ்ச் சிறார்களினதும் இளையவர்களினதும் மெய்வல்லுனர் விளையாட்டுகளின் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து அவற்றை வளர்த்தெடுக்கும் நோக்குடன் ஆண்டுதோறும் கல்விச்சேவையால் நடாத்தப்படுகின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டி இவ்வாண்டும் பேர்ண், ஜெனீவா, செங்காலன், ரிசினோ, பாசல், சூரிச் ஆகிய வலயங்களில் நடைபெறுகின்றது. இப் போட்டியில் ஓட்டம், பந்தெறிதல், பந்துபொறுக்குதல், குண்டெறிதல், நீளம் பாய்தல் போன்ற போட்டிகளும் 11 வயதுக்கு மேற்பட்ட …
தமிழ்க் கல்விச்சேவை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடாத்தவுள்ள தமிழ்மொழி பட்டப்பிடிப்புக்கான தகமைபெறும் அடிப்படைக் கற்கைநெறித் தேர்வு இன்று (27.05.2018) பேர்ண், பாசல், சூரிச் ஆகிய மூன்று தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றது. இத்தேர்வில் ஐம்பத்தேழு ஆசிரியர்கள் மற்றும் இளையோர்கள் பங்குபற்றினர்.
சுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி நடாத்தப்பெற்றது. 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் 607 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இப் போட்டி முடிவுகளினை 27.06.2018 புதன்கிழமை பள்ளிமுதலவ்ர மூலமாக அல்லது கல்விச்சேவையின் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் 30.09.2018 ஆம் நாள் பேர்ண் – புறூக்டோர்வ் மண்டபத்தில் நடைபெறவுள்ள …
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து, இந்தியா தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 27.05.2018 அன்று நடாத்தும் தமிழ்மொழி அடிப்படைக் கற்கைநெறி சிறப்புத்தேர்வுக்கான விண்ணப்பம் கோரல். 31.03.2018 க்கு முதல் கீழ்காணும் படிவத்தினை நிரப்பி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். Special Exam Application Mode for MoU2 (1) TESS-Application for Examination
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு – 2049 தைத்திங்கள் முதலாம் நாள் (14.01.2018) தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவினைத் தமிழ்க் கல்விச்சேவைத் தமிழ்ப் பள்ளிகள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியிருந்தன. மாநில இணைப்பாளர், பள்ளிமுதல்வர்கள், துணைமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள், தமிழ்மக்கள் இணைந்த வகையில் பொங்கல் பொங்கிக் கதிரவனுக்குப் …
ஓவியப்போட்டி 2017 முடிவுகள் தமிழ்க் கல்விச்சேவையினால் 28.05.2017 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடுதளுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 580 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Result – Oviyam 2017 Final
சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச் சேவையினால் பள்ளிமுதல்வர்களுக்கான செயலமர்வு ஒன்று (11.06.2017 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து 17.00 மணி வரை பேர்ண் மாநகரில் நடாத்தப்பெற்றது. கனடா ரொரன்ரோப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளரும், ரொரன்ரோ மாவட்டக் கல்வித் திணைக்களத்தின் அனைத்துலக மொழிக் கல்வித்திட்ட அலுவலரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக கற்கை நெறிகளுக்கான கனேடிய நாட்டிற்கான விரிவுரையாளருமான திரு. பொன்னையா …
தமிழ்க் கல்விச்சேவையுடன் இணைந்து பணியாற்றும் பழைய மாணவர்கள் மற்றும் ஆண்டு 11 இல் கல்விகற்றுவரும் மாணவர்களின் தன்விபரம் தமிழ்க் கல்விச்சேவையின் பணிகளில் எமது இளையவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கோடு தன்விபரப்படிவமொன்று 21.05.2017 பேர்ணில் நடைபெற்ற அவர்களுடனான ஒன்றுகூடலில் வழங்கப்பெற்றது. அன்றைய நாள் வருகை தராத மாணவர்களையும் எம்மோடு இணைத்துக் கொள்ளும் வகையில் அந்தப்படிவம் எமது இணையத்தளத்தில் …
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது வருடமாக இன்று, 06.05.2017 ஆம் திகதி சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பதினோராம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். எழுத்துத்தேர்வுடன் இவ்வருடம்முதல் புலன்மொழித்தேர்வுகளும்; நடாத்தப்பெற்றன. இக் கல்வியாண்டுமுதல் புதிதாக …