செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசையும் செங்காளன், துர்க்கா மாநில மாணவர்களின் ஆண்டு 11 தொடக்க விழாவும் இன்று 01.10.2016 காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி 14:30 மணிவரை செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை நடைபெற்றது. நிகழ்வில் மாணவர்கள் பண்ணிசை ஓதி அவர்களே பூசையினையும் நிகழ்த்தினர். நிகழ்வின் சிறப்பம்சமாக 2016/17 கல்வியாண்டில் …
சுவிற்சர்லாந்தில் 22 வருடங்களிற்கு மேலாக நடுநிலைசார் நற்றமிழ்ச் சேவையாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவையின் இருபத்தோராவது பொதுப்பரீட்சை சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் இன்று (09.05.2015) ஐம்பத்தெட்டு பரீட்சை நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தமிழ்மொழிப் பரீட்சையில் ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு பத்து வரை ஐயாயிரத்து இருநூற்றுத்தொண்ணூற்று ஏழு பரீட்சார்த்திகள் தோற்றியிருக்கின்றனர். தமிழ் வித்தியாலயங்களின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் என பலநூறு …
சுவிற்சரலார்ந்து தமிழ்க்கல்விச்சேவை, இந்தியாவில் இயங்கி வரும் SRM பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய அயலகத் தமிழாசிரியர் பட்டயப் படிப்பினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டயமளிப்பு விழா கடந்த 10.09.2016ஆம் திகதி காலை 10:00 மணி முதல் சூரிச் ஆசிரியர் கல்விப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இப்பட்டயமளிப்பு விழாவில் SRM பல்கலைக்கழகத் தேர்வு ஆணையாளர் முனைவர் எஸ். பொன்னுச்சாமி அவர்களும் …
தமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி 15 நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் 542 மாணவர்கள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். வெற்றிபெற்ற மாணவர்களில் 5,6,7,8,9,10,11 வயதுப் பிரிவு மாணவர்களுக்கு குறிப்பிட்ட மாநிலங்களை இணைத்த வகையில் வலய மட்டத்திலும், ஏனைய 13, 15, 17, 19 வயதுப்பிரிவுகளுக்கு சுவிஸ் நாடுதழுவிய …
சூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாகக் கடமையாற்றுவதற்குத் தகைமையுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகள் தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கான தகைமையும,அனுபவமும் கொண்டிருப்பதுடன் ஜேர்மன் மொழியில் B1 நிலையில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், ஈமெயில், கல்வித்தகைமை, அனுபவம், ஜேர்மன் மொழியறிவு ஆகிய விபரங்களினை உள்ளடக்கிய …
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் நடாத்தப்படும் பொதுப்பரீட்சை இவ்வருடம் 30.04.2016ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களினை தமிழ்வித்தியாலயங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் ஏனையோரும் தமிழ்வித்தியாலயப் பொறுப்பாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்வித்தியாலயங்களில் கல்வி பயிலாத மாணவர்கள் விண்ணப்பப்படிவத்தினையும் விதிமுறையினையும் இவ் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுத்திகதி: 02.03.2016 புதன்கிழமை பரீட்சைத்திகதி: …